என்.ஐ.ஏ வசம் கோப்புகள் ஒப்படைப்பு: சூடுபிடிக்கிறது கோவை வழக்கு!

தமிழகம்

கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தும் என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் இருந்து வருகின்றன.

இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்த நிலையில், அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தநிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இன்று(அக்டோபர் 27) 2 ஆவது முறையாக கோவை சென்று கால்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ டிஐஜி வந்தனா உடன் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனையில் ஈடுபட்டார்.

வழக்கின் தற்போதைய நிலவரம் வரை டிஜஜி வந்தனாவிடம் தெரிவிக்கப்பட்டது. கோவை கார் வெடிப்பில் தமிழக காவல்துறை நடத்திய விசாரணை தொடர்பான அனைத்து கோப்புகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து கோவை கார் வெடிப்பு வழக்கில் முதல் தகவல் அறிக்கையை என்.ஐ.ஏ பதிவு செய்தது. தேசிய புலனாய்வு முகமையின் சென்னை கிளையில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.

சென்னை என்.ஐ.ஏ காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஜித் தலைமையில் இனி விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கலை.ரா

மருது சகோதரர்கள் குருபூஜை: மாஸ் காட்டிய ஓ.பி.எஸ்

லோகேஷுடன் தீபாவளி கொண்டாடிய கமல்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0