கோவை கார் வெடிப்பில் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் உள்ள 5 பேரின் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டனர்.
கோவை ஈஸ்வரன் கோயில் வீதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கார் வெடித்து விபத்துக்குள்ளாகி ஜமேஷா முபீன் என்பவர் பலியானார். இந்த நிலையில் காரில் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு தடயவியல் துறைக்கு அனுப்பட்டது.
தனிப்படை போலீஸாரின் தேடுதல் வேட்டையில் நவாஸ், ஃபெரோஸ், தல்கா, ரியாஸ், இஸ்மாயில் உள்ளிட்ட 5 பேர் கைதாகினர். உபா உள்ளிட சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து போலீஸ் சிறையில் அடைத்திருந்தது.
தனிப்படை போலீஸாருக்கு விசாரணைக்கு கூடுதலாக அவசாகம் வேண்டும் என்பதனால் 5 பேரையும் மூன்று நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 5 பேருக்கான மூன்றாம் நாள் கஸ்டடியான இன்று(அக்டோபர் 28) காலை தனிப்படை போலீஸார் கைதானவர்களின் வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தினர்.
உக்கடம் பகுதியில் 2 பேரின் வீடும், ஜி.எம் நகரில் மற்ற 3 பேரின் வீடும் இருக்கிறது. சோதனையின் முடிவில் கைபற்றப்பட்டது என்ன என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ஆறாவதாக கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது.
ஐவரின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் கேட்பாடற்று கிடந்த வாகனங்கள் போலீஸாரால் அப்புறபடுத்தப்பட்டன.
தீவிரவாத சதித்திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த வழக்கை நேற்றே(அக்டோபர் 27) என்.ஐ.ஏ வசம் ஒப்படைத்தது தமிழக காவல்துறை.
இருந்தாலும் அவர்கள் இன்னும் விசாரணையைத் தொடங்காத நிலையில், தமிழக போலீஸ் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.
கலை.ரா
கோவை கார் வெடிப்பு: போலீஸ் விசாரணையில் புது தகவல்!
ட்விட்டர் நிறுவன தலைகளுக்கு ஆப்பு: அதிரடியில் இறங்கிய எலான் மஸ்க்