உலகம் முழுவதும் நாளை (அக்டோபர் 24 ) தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் , கோவையில் இன்று காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் அதில் பயணித்தவர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று ஆய்வு செய்தார்.
அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தடயங்கள் ஒவ்வொன்றாக கிடைத்து வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில், நெல்லை , விழுப்புரம் பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் 31 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்குள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம் , மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம், கோட்டக்குப்பம், செஞ்சி மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிகளிலும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
T20WorldCup2022 : இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
புகார் அளித்த பெண்ணை அறைந்த பாஜக அமைச்சர்!