கோவை, மதுரைக்கான ஒருங்கிணைந்த மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த மூன்று ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.
கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் தலைமையில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கோவை மற்றும் மதுரையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஒருங்கிணைந்த திட்ட அறிக்கை மாநில அரசின் மூலம் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் கூடுதல் தகவல்கள் மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டதை அடுத்து, கூடுதல் தகவல்களோடு தற்போது கோவை மற்றும் மதுரைக்கான ஒருங்கிணைந்த மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த மூன்று ஆண்டுகளில் மெட்ரோ ரயில் திட்டம் முடிக்கப்படும்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் அவிநாசி மற்றும் சத்தியமங்கலம் சாலையில் சுமார் 34.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 32 நிறுத்தங்களோடு மொத்தம் 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாராகி உள்ளது. இதில் சத்தியமங்கலம் சாலையில் முதல் தளமாக மெட்ரோ திட்டம் அமையும்.
அவிநாசி சாலையில் நெடுஞ்சாலை துறையினரின் பாலங்கள் இருக்கும் இடத்தில் இரண்டாம் தளமாக அதைவிட உயரத்தில் ஆங்காங்கே மெட்ரோ ரயில் பாலம் அமைக்கப்படும்.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் பூமிக்கு அடியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரையை விட கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக முடிவடையும்.
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 11,340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாராகி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பிஸ்தா பாயசம்
மோடி, அமித்ஷாவை ஆளுநர் ரவி சந்தித்தது ஏன்?
’எம்.ஜி.ஆருடன் மோடியை ஒப்பிடுவதா?’ : அண்ணாமலைக்கு ஜெயக்குமார் காட்டமான பதில்!
இந்த வருசத்துல என்ன சாதிச்சீங்க : அப்டேட் குமாரு
பெண்கள் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா… ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!
.