நிலக்கரி சுரங்கம் அமைக்கும் இடங்களின் திருத்தப்பட்ட புதிய பட்டியலில் இருந்து தமிழ்நாட்டை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு நீக்கியுள்ளது.
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் தோண்ட மத்திய நிலக்கரி அமைச்சகம் மார்ச் 29 ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது.
நாட்டின் 101 இடங்களில் நிலக்கரி சுரங்கம் தோண்ட விடப்பட்ட அந்த டெண்டரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு சேத்தியாத்தோப்பு, அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மைக்கேல்பட்டி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி ஆகிய டெல்டா பகுதிகள் இடம்பெற்று இருந்தன.
இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அதனையடுத்து தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணி கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட உள்ள இடங்களின் திருத்தப்பட்ட புதிய பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அதில் தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள மூன்று பகுதிகளையும் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு நீக்கியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ்நாடு அமைச்சரவையில் அதிகரிக்கும் இளைஞர் படை!
கேரளாவில் பெண் மருத்துவர் கொடூர கொலை: வலுக்கும் போராட்டம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு!