மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 2) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு மறைந்த பத்திரிகையாளர்கள், கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள், இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் பலியான பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கடந்த ஓராண்டில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் மேற்கொண்ட பணிகள் குறித்த ஆண்டறிக்கையை பத்திரிகையாளர் நச்சினார்க்கினியன் வாசித்தார்.
அவர் பேசும்போது, “அனைத்து ஊடகங்களிலும் பணியாற்றும் பத்திகையாளர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் நல வாரியத்தில், டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட, அனைத்து பத்திரிகையாளர்களையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
சங்கத்தின் வலியுறுத்தல் காரணமாகவும், நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களாக உள்ள நமது சக பத்திரிகையாளர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும், அரசு அங்கீகார அட்டை இருந்தால் மட்டுமே நல வாரியத்தில் உறுப்பினராக முடியும் என்ற முடிவை அரசு மறுபரிசீலினைக்கு உட்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்களின் மருத்துவ சிகிச்சைக்காக, ஒன்றிய மற்றும் மாநில அரசு வழங்கும் நிதியை பல பத்திரிகையாளர்களுக்கு சங்கம் பெற்றுத்தந்துள்ளது. அதேபோல், மறைந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதியையும் பெற்றுத்தந்துள்ளது” என்றார்.
இதனை தொடர்ந்து ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு ஒரு தவறான முன்னுதாரணம் என்று மாற்றத்திற்கான ஊடகவியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹசீப் முகமது தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அச்சங்கத்தின் தலைவர் மணிகண்டன் வழிமொழிய, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து ஊடக பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயநாடு நிலச்சரிவு: ராணுவ உடையில் களமிறங்கிய மோகன்லால்… ரூ.3 கோடி நிதியுதவி!
ஆடிப்பெருக்கில் அதிர்ஷ்டம்… தங்கம் விலை திடீர் சரிவு… மிஸ் பண்ணிடாதீங்க!