நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 1) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்த நாள் இன்று முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அவரது ரசிகர்கள், பொதுமக்கள் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவாஜி கணேசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் புகைப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், மேயர் பிரியா, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நடிகர்கள் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு, நாசர் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இன்று டெல்லி புறப்படுகிறார் அண்ணாமலை
காவிரி விவகாரம்… அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி