மாரடைப்பால் நேற்று (அக்டோபர் 19) மரணமடைந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஆன்மிகத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்ற புகழுக்கு சொந்தக்காரரான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மரணம் நாடு முழுவதும் உள்ள அவரது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பங்காரு அடிகளார் மரணத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணியளவில் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பங்காரு அடிகளாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சுவுந்தரராஜன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே பங்காரு அடிகளார் மரணித்த செய்தி அறிந்ததில் இருந்து மேல்மருவத்தூருக்கு பக்தர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து சிவப்பு நிற ஆடையில் பக்தர்கள் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இன்று மாலை 5 மணியளவில் பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட ’ஆட்டநாயகன்’ விராட் கோலி
தொழிற்சாலைகள் உரிமத்தைப் புதுப்பிக்க அக்.31 கடைசி நாள்!
ஆயுத பூஜை: பூக்களின் விலை கடும் உயர்வு!