டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 9) ஆய்வு செய்து வருகிறார்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12 ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதற்காக தண்ணீர் செல்லும் வழித்தடங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 4,273.17 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.90 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று (ஜூன் 8) இரவு விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி சென்றார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து இன்று தஞ்சையில் நடைபெற்று வரும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்கு முன்னர் தஞ்சை அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அப்போது தூர்வாரும் பணிகள் குறித்து வரைபடம், புகைப்படம் மூலம் அதிகாரிகள் முதல்வரிடம் விளக்கம் அளித்தனர்.
இதனையடுத்து முதலை முத்துவாரி பகுதியில் தூர் வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர்.
ஆய்வின் போது விவசாய சங்க பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்.
மோனிஷா
அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் சிறை உறுதி!
7வது உலக அழகி பட்டத்திற்கு குறிவைக்கும் இந்தியா