ஆன்லைன் சூதாட்ட மசோதா: சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!

தமிழகம்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று (அக்டோபர் 19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுப்பதற்கு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக விசாரணை மேற்கொள்ளச் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு கடந்த ஜூலை 27 ஆம் தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.

பின்னர் செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அவசர தடை சட்டத்திற்குக் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தர சட்டம் கொண்டுவரப்படும் என்று தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் இன்று மூன்றாவது நாளாகக் கூடவிருக்கிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தின் கடைசி நாளான இன்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

மோனிஷா

டாப் 10டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

இந்திய கமியூனிஸ்ட் பொதுச்செயலாளர்: டி. ராஜா மீண்டும் தேர்வு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *