காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் பேசிக் கொண்டே சாப்பிடும் காட்சிகள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று (ஆகஸ்ட் 25) விரிவாக்கம் செய்யப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் பயின்ற நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது குழந்தைகளுக்கு உணவு பரிமாறிய முதல்வர், குழந்தைகளுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டார். குழந்தைகளிடமும் ’உணவு பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர், குழந்தைகளிடம் நான் யாருனு கேள்வி கேட்டதும், அதற்கு அவர்கள் பதில் அளித்ததும் பலரையும் கவர்ந்துள்ளது.
முதல்வர்: நான் யாருனு தெரியுமா?
சிறுமி: ம்ம்… தெரியும்.
முதல்வர்: யாரு?
சிறுமி: முதலமைச்சர்
முதல்வர்: பேரு என்ன?
சிறுமி: சிஎம்
முதல்வர்: சிஎம் என்பது பதவி… பெயர் சொல்லு?
அதற்கு சிறுமி என்ன என்று தெரியாமல் விழிக்க…
தொடர்ந்து தனது வலப்பக்கம் இருந்த சிறுவனிடம் ”உனக்கு என் பேரு தெரியுமா ?” என்று முதல்வர் கேட்டார்.
சிறுவன்: தெரியும்.
முதல்வர்: என்ன?
சிறுவன்: ஸ்டாலின்
முதல்வர்: ம்ம்.. வெரி குட்.
மீண்டும் சிறுமியை பார்த்து ”என்னுடைய பெயர் மு.க.ஸ்டாலின்” என்று சொன்னார்.
தொடர்ந்து குழந்தைகளுடன் பேசிய முதல்வர் “நா இதுக்கு முன்னாடி பல முறை இந்த ஊருக்கு வந்திருக்கேன் தெரியுமா?.. பாத்துருக்கியா?”
சிறுமி: ம்ம்
அருகில் இருந்த சிறுவனிடம் “நீ பேசமாட்டியா… வாட்ச் சும்மா ஸ்டைலுக்கு கட்டிட்டு வந்துட்டியா? டைம் பாக்க தெரியாது தானே.. என்ன டைம் ஆகுது இப்போ?” என்று கேட்டார்.
சிறுவன்: வாட்ச் ஆஃப்ல இருக்கு..!?
முதல்வர்: என்ன வாட்ச் ஓடல
சிறுவன்: மூஞ்சிக்கிட்ட எடுத்துட்டு வந்தா தா ஓடும்.
முதல்வர்: தம்பி… என் வாட்ச் பாரு… என்ன டைம் ஆகுது சொல்லு
சிறுவன்: இந்த வாட்ச்ல டைம் பாக்க தெரியல என்று சொல்ல,
அதற்கு சிரித்த முதல்வர் ஸ்டாலின், ‘சரி சாப்பிடு’ என்று கூறியபடி அவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டு முடித்தார்.
மோனிஷா
பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு: உதயநிதி உறுதி!
“உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வோம்” : ஓபிஎஸ் தரப்பு!