டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (செப்டம்பர் 7) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து நீரை திறந்து விடுகிறது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு மற்றும் இந்திய வானிலை மையத்தின் ஆண்டு மழைப் பொழிவு பற்றிய விபரங்களையும் பெற்று டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தண்ணீர் திறப்பைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் நீர் பற்றாக்குறை காரணமாக சாகுபடிக்குத் தேவையான நீர் கடைமடை வரை சென்றடையவில்லை.
குறுவை சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்திருந்த நிலையில், வேளாண் துறை அதிகாரிகள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறுவை பயிர் சேத ஆய்வு மற்றும் நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இதில் துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
மோனிஷா
திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் எப்போது?
உதயநிதி ஸ்டாலின் மீது எஃப்.ஐ.ஆர்!