cm stalin condolence for vellammal patti dead

வேலம்மாள் பாட்டி மறைவு: முதல்வர் இரங்கல்!

வேலம்மாள் பாட்டி உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு, 2000 ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு மலர்ந்த முகத்துடன் சென்ற வேலம்மாள் என்னும் பாட்டியை குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜாக்சன் ஹெர்பி என்பவர் எடுத்த புகைப்படம் வைரல் ஆனது.

அந்த புகைப்படத்தின் மூலம் தமிழக அரசின் சாதனை விளம்பர போஸ்டர்களில் மீண்டும், மீண்டும் இடம்பிடித்து வந்தார் வேலம்மாள் பாட்டி. தன் முகம் ததும்பிய புன்னகையால் வைரலான வேலம்மாள் பாட்டி நேற்று (ஜூலை 27) இரவு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்.

கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக் கழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவின் சுழலில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்

புன்னகையால் இணையத்தை கவர்ந்த வேலம்மாள் பாட்டி காலமானார்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts