முதல்வர் பயணம்: பாதுகாப்பு காவலர்கள் எண்ணிக்கை குறைப்பு!

தமிழகம்

முதலமைச்சர் செல்லும் போது சாலைகளில் போக்குவரத்தை சீர் செய்வதற்காக நிற்கக் கூடிய காவலர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் தனது வீட்டிலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் போதும் மற்ற இடங்களுக்குச் சாலை மார்கமாகச் செல்லும் போதும் பாதுகாப்பு பணியிலும், சாலை போக்குவரத்தைச் சீரமைப்பதற்காகவும் 20 அடிக்கு ஒரு போலீஸ் நின்று கொண்டிருப்பார்கள்.

காவலர்களுடன் போக்குவரத்து காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.முதலமைச்சர் சாலையில் செல்லும் போது பணியில் இருக்கும் காவலர்கள் போக்குவரத்தை உடனடியாக சீர் செய்து கான்வாய் வாகனம் செல்வதற்கு வழிவகை செய்வார்கள்.

இந்நிலையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சாலை பாதுகாப்பிற்காக நிற்கக்கூடிய காவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல் 20 அடிக்கு ஒரு காவலர்கள் நிற்காமல், முக்கிய சந்திப்புகளில் மட்டும் கான்வாய் வாகனம் செல்லும் நேரத்தில், போக்குவரத்தைச் சீர் செய்வதற்காகக் காவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இந்நிலையில், இன்று மதியம் 12. 25 மணியளவில் தலைமை செயலகத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது அவர் செல்லும் வழியில் பொதுமக்கள் வாகனங்கள் எங்கும் நிறுத்தப்படவில்லை. எதிர்திசையிலும் வாகனங்கள் சென்று கொண்டிருந்ததை காண முடிந்தது.

முதல்வர் பாதுகாப்பு வாகனங்களுக்கு முன்பும் பின்பும் தடையில்லாமல் வழக்கம் போல் போய்க் கொண்டிருந்ததையும் காண முடிந்தது.

மோனிஷா

தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு இந்திய கடற்படை உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *