புதிய வருவாய்த்துறை கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர்

Published On:

| By Selvam

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 20) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.19.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டடம், வட்டாட்சியர் அலுவலக கட்டடம் உள்ளிட்ட கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்ச்சி பெற்ற 18 துணை ஆட்சியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செல்வம்

என்னை துரத்துவதுதான் உங்கள் லட்சியமா? நொந்து போன காயத்ரி ரகுராம்

குரூப் 4 தேர்வு : முதல்வருக்கு திருமா கோரிக்கை!