வாரிசு: ஸ்டாலின் சொல்லும் விளக்கம்!

தமிழகம்

திமுக-வினருக்கு வாரிசு இருக்கிறது, அதனால் எங்களை கம்பீரமாக வாரிசு என்று சொல்லுகிறோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் இல்லத் திருமண விழா இன்று (டிசம்பர் 4) மாமல்லபுரத்தில் நடைபெற்றது. மணமக்கள் வெற்றிச் செல்வன் – நித்யவதி திருமணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது, “10 ஆண்டுகால அதிமுக ஆட்சி முழுவதையும் சீரழிவு என்று சொல்லி விட முடியாது. முதல் ஆறு ஆண்டுகள் சீரழிவு. கடைசி நான்கு ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட ஒரு பேரிடர் என்று தான் சொல்ல வேண்டும். அந்தப் பேரிடரை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யும் பணியைத் தான் நம்முடைய திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மகன் வெற்றிச் செல்வன் சாலவாக்கம் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இதனைக் கூட வாரிசு வாரிசு என்று சொல்வார்கள். எங்களுக்கு வாரிசு இருக்கிறது அதனால் கம்பீரமாக வாரிசு என்று சொல்லுகிறோம். அதுதான் குடும்ப பாச உணர்வு.

அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை குடும்ப பாச உணர்வோடு உருவாக்கி தந்திருக்கிறார்கள். நானும் இளைஞர் அணியில் இருந்து தான் இன்றைக்கு இந்த இடத்திற்கு வந்து உட்கார்ந்திருக்கிறேன். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச்சொல்லியிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய் மணமக்களை மனமார வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

வைரலாகும் அஜித்தின் துணிவு போஸ்டர்!

குற்றாலம் போகிறவர்களுக்கு குட் நியூஸ்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.