வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக திட்டப் பணிகளை முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 4) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கள ஆய்விற்குச் செல்லும் போது சில இடங்களில் பணிகள் முழுமையாக முடியாத நிலை இருக்கிறது. வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் .
பணிகள் முன்னேற்றம் குறித்துப் பார்வையிட அமைக்கப்பட்டுள்ள டேஸ்போர்டில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று பணிகளின் முன்னேற்றம் குறித்த புகைப்படங்களையும் வாரம்தோறும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால் – அது எவ்வளவு வேகமாக செயல்பாட்டிற்கு வருகிறது என்பதுதான் முக்கியம். எனவே, தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்கள் கலந்தாலோசித்து உடனுக்குடன் திட்டத்தைச் செயல்படுத்திட வேண்டும். அறிவிக்கப்பட்ட திட்டம் தாமதமானால் அதற்கான மதிப்பீடுகள் அதிகரிக்கும்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரிகளை அழைத்துப் பாராட்டுங்கள். முன்னுரிமைத் திட்டங்களை முழு மூச்சுடன் நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு அத்திட்டங்களின் பயன்களைக் கொண்டு போய்ச் சேர்த்திட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
பிரியா
அதிமுகவை தொட்டார் கெட்டார்: அண்ணாமலையை எச்சரித்த ஜெயக்குமார்
மதுரை மாநாட்டில் 15 லட்சம் பேர்: ஜெயக்குமார்
எத்தனையாவது தடவை?!