76 ஆவது சுதந்திர தினம் : 2ஆவது முறையாக கொடியேற்றிய மு.க.ஸ்டாலின்!

76ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார்.

நமது நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் 8.50க்கு வந்திறங்கினார்.

அவரை தமிழ்நாடு தலைமைச் செயலர் வெ.இறையன்பு வரவேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படை அதிகாரி, கிழக்கு கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் கூடுதல் டி.ஜி.பி. அகியோரை தலைமைச் செயலாளர் முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அலங்கார அணிவகுப்பை பார்வையிட்டார். 9.04 மணியளவில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, பேண்டு வாத்தியங்கள் முழங்கத் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரையை ஆற்றி வருகிறார்.

இதையடுத்து, தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது உள்பட பல்வேறு வகையான விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி கவுரவிக்கவுள்ளார்.

சமூகப்பணியாளர்கள் விருது, சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான விருதுகளை வழங்கும் முதல்வர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்.

முதல்வரான பிறகு இன்று இரண்டாவது முறையாக கொடியேற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

  • க.சீனிவாசன்

இந்திய சுதந்திரத்துக்கு 75 வயது நிறைந்தது! வளர்ந்து செழிக்கட்டும் இந்தியக் கூட்டாட்சி குடியரசு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts