expand free breakfast scheme

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: அனைத்து கட்சிகளுக்கும் முதல்வர் அழைப்பு!

தமிழகம்

அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைக்க அனைத்து கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் காலை உணவுத் திட்டம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில், இந்தத் திட்டத்தினை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைக்க வேண்டும் என்று  அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், முதலமைச்சர் இன்று (ஆகஸ்ட்) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணை கடந்த 27-7-2022 அன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக 1,545 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது பயனடைந்து வருகிறார்கள்.

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நாட்டிற்கே முன்னோடியாய், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 15.75 இலட்சம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டில் விரிவுபடுத்தி கடந்த 7-6-2023 அன்று ஆணை வெளியிடப்பட்டது.

முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பள்ளிகளில் காணப்பட்ட மிகச் சிறந்த பலன்களைக் கருத்தில் கொண்டு இந்தச் சீரிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

கனிமொழி பற்றி அவதூறு பாடல் : அதிமுக மீது தமிழ்நாடு முழுவதும் புகார்!

”சொட்டு கண்ணீர் கூட வரவில்லை”: ஜெயக்குமார் விமர்சனம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: அனைத்து கட்சிகளுக்கும் முதல்வர் அழைப்பு!

  1. ஐயா, அவங்களை லேட்டாக்காம சீக்கிரம் வந்து துவக்கி வைக்க சொல்லுங்கய்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *