சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையின் 200ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அங்கு கட்டப்பட்ட புதிய கட்டடம் உள்பட மருத்துவ துறைக்கு
ரூ.195 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 27) தொடங்கி வைத்தார்.

சென்னை எழும்பூர் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனையின் 200ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு,
அங்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் உள்பட ரூ.195 கோடி மதிப்பிலான மருத்துவக் கட்டடங்கள், நவீன கருவிகள் மற்றும் மருத்துவ ஊர்திகள் சேவையை இன்று (ஆகஸ்ட் 27) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் ஆறு தளங்களைக் கொண்ட ரூ.65.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
மதுரை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தஞ்சாவூர், தேனி, விருதுநகர், திருப்பூர், தூத்துக்குடி, திருவாரூர், திருச்சி, ராமநாதபுரம், கள்ளகுறிச்சி ஆகிய மாவட்டங்களில் ரூ.127.73 கோடி மதிப்பீட்டில் 18 மருத்துவத் துறைக்கு சம்பந்தமான கட்டிடங்களைத் திறந்து வைக்கிறார்.
மருத்துவ துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்காக, 253 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
271 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், 16 தாலுகா மருத்துவமனைகளுக்கும் ரூ.49.15 கோடி செலவில் அல்ட்ரா சவுண்ட் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
150 பிறந்த குழந்தைகளுக்கான 74 சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகளுக்கு வெண்டிலேட்டர்கள் ரூ.15 கோடி செலவில் வழங்கப்படது.
செல்வம்
‘இலவசம்’ வாக்குறுதியை மற்றவர் மீது சுமத்த கூடாது : நிர்மலா சீதாராமன்