500 டாஸ்மாக் கடைகள் மூடல் : தமிழக அரசு உத்தரவு!

Published On:

| By Kavi

500 டாஸ்மாக் கடைகளை நாளை முதல் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூட வேண்டுமென 20.04.2023 அன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22.6.2023 முதல் செயல்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூடப்படும் கடைகள் எவை எவை என்பது இனிமேல் தான் தெரியவரும்.

பிரியா

“உயர் நீதிமன்றத்திலேயே முறையிடலாம்” : செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம்!

செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி: காவேரி மருத்துவமனை அறிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel