மதுரையில் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழா இன்று (மார்ச் 25) நடைபெற்றது.
ரூ.166 கோடி மதிப்பீட்டில் மதுரை கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடிக்கல் நாட்டினர். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நீதிமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று (மார்ச் 24) இரவு விமானம் மூலம் மதுரை வந்தார். இன்று காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.
செல்வம்
அன்று ராகுல் கிழித்த அவசரச் சட்டம், இன்று அவரையே… பத்து வருட ஃப்ளாஷ் பேக்!
ராகுல் தகுதிநீக்கம்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!