எம்.டி.சி பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று (மே 29) திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் பற்றாக்குறையால் பேருந்து சேவையை சரிவர இயக்க முடியாததால் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் 500 ஓட்டுநர்களை நியமிக்க மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டது. இதற்கான டெண்டரும் விடப்பட்டு தனியார் நிறுவனம் மூலம் ஓட்டுநர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த பணி கிடப்பில் போடப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவைத் திரும்ப பெற வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கைளை முன்வைத்தன.

ஆனால் வரும் ஜூன் மாதம் முதல் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணியில் சேர்க்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் இன்று மாலை முதல் பணிமனைகளில் இருந்து பேருந்துகளை இயக்காமல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சைதாப்பேட்டை, ஆலந்தூர், தியாகராய நகர், ஆவடி, வடபழனி உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பணிமுடிந்து வீடுகளுக்கு திரும்பும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். பேருந்து நிறுத்தங்களில் அவர்கள் காத்திருக்கின்றனர்.

மோனிஷா

ஐபிஎல் இறுதிப்போட்டி: பிரார்த்தனை செய்யும் விக்னேஷ் சிவன்

எம்.ஜி.ஆர் பல்கலைக்கு புதிய துணைவேந்தர்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts