கிறிஸ்துமஸ் : எந்த இடத்திலிருந்து எத்தனை சிறப்புப் பேருந்துகள்?

Published On:

| By Kavi

Christmas Special buses from Chennai

கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  ‘இன்று (டிசம்பர் 20 வெள்ளிக்கிழமை),  நாளை (டிசம்பர் 21 – சனிக்கிழமை), நாளை மறுநாள் (டிசம்பர் 22 – ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25 – புதன்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 20/12/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 325 பேருந்துகளும், 21/12/2024 (சனிக்கிழமை) 280 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 20/12/2024 மற்றும் 21/12/2024 ஆகிய தேதிகளில் மொத்தம் 81 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்திலிருந்து 20/12/2024 மற்றும் 21/12/2024 ஆகிய தேதிகளில் மொத்தம் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.  

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: ஈரோட்டில் ஸ்டாலின் முதல் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் வரை!

கிச்சன் கீர்த்தனா: பீர்க்கங்காய்ச் சட்னி!

இந்தியாவில் பத்து பைசா கூட கொடுக்காமல் ரயிலில் போகலாம்? எங்கே?

ஆற்றில் இறங்கி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்: பாலம் அமைக்க வலியுறுத்தல்!

பியூட்டி டிப்ஸ்: தலைக்கு மருதாணி… எப்படி உபயோகிப்பது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share