கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்வோரின் வசதிக்காகத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சிறப்புப் பேருந்துகளை அறிவித்துள்ளது.
வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களைத் தொடர்ந்து திங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை 22ஆம் தேதியோடு தேர்வு முடிந்து அரையாண்டு விடுமுறையும் விடப்படவுள்ளது.
இதன்காரணமாக சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.
இதனால் பேருந்துகளில் கூட்டம் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு பயணிகளின் வசதிக்காகப் போக்குவரத்துத் துறை சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 22ஆம் தேதி கூடுதலாக 350 பேருந்துகளும், 23ஆம் தேதி கூடுதலாக 290 பேருந்துகளும் இயக்கப்படும் என 640 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
சென்னையிலிருந்து நெல்லை, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணி மற்றும் இதர ஊர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இதெல்லாம் கமல் சாரோட நிப்பாட்டிக்கங்க… மாயாவின் மூக்குடைத்த விக்ரம் தந்தை!