நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கிய சீன கேஸ் சிலிண்டர் உருளையை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் நம்பியார் நகரைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (பிப்ரவரி 14) அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது வெள்ளை நிற ஒரு மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியதை பார்த்தனர்.
அந்த உருளையை கடற்கரை மணற்பகுதிக்கு கொண்டு வந்து வைத்துவிட்டு நாகையில் உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் சுங்கத்துறை, கடலோர காவல்படை, க்யூ பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 அடி உயரமும் 30 கிலோ எடையுள்ள அந்த சிலிண்டர் உருளையை ஆய்வு செய்தனர்.
இந்த உருளையில் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் கேஸ் நிரப்பப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த உருளையானது வங்ககடலில் சென்ற கப்பலில் இருந்து தூக்கி வீசப்பட்டதா அல்லது தவறி விழுந்ததா என்று நாகப்பட்டினம் கடலோர காவல்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம்
அதானி குழுமம்: பாஜக மீதான நேரடி குற்றச்சாட்டு – முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை!