கிச்சன் கீர்த்தனா: சில்லி சப்ஜி

விடுமுறை நாட்களில் எதிர்பாராத விருந்தினர் வருகையின்போது என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள் பலருண்டு. குறிப்பாக சைடிஷ் பிரச்சினை, பெரும் பிரச்சினையாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நாண், சப்பாத்தி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள காரசாரமாக இருக்கும் இந்த சில்லி சப்ஜி.

என்ன தேவை?

பஜ்ஜி மிளகாய்- 150 கிராம்
எண்ணெய்- 15 மில்லி
வெங்காயம், தக்காளி – 2
கடுகு- 50 கிராம்
சீரகம் – 15 கிராம்
உளுந்து- 5 கிராம்
கொத்தமல்லித்தழை – 50 கிராம்
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 3 பல்

எப்படிச் செய்வது?

பஜ்ஜி மிளகாயைத் தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்து எடுத்துக்கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உளுந்து, தாளித்து, அரைத்து வைத்திருக்கும் விழுது சேர்த்து 10 மில்லி தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் தனியாக வேகவைத்த பஜ்ஜி மிளகாயைச் சேர்த்து எடுத்துப் பரிமாறவும்.

கேப்பேஜ் ரோல் ஸ்நாக்ஸ்

உணவின் மூலம் அல்சரைத் தடுக்கலாமா?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts