கிச்சன் கீர்த்தனா: சில்லி பனீர்

தமிழகம்

உடல் ஆரோக்கியத்துக்கு புரதம் நிறைந்த உணவுகள் மிகவும் அவசியம். புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் நீங்கள் நிறைவாக இருப்பதை உணர முடியும். புரதம் அதிகமாக உள்ள உணவுகளான இறைச்சி, மீன் மற்றும் முட்டை மட்டுமல்லாமல் பனீரிலும் புரதம் அதிகமாக உள்ளது.

மேலும் பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக உள்ளதால் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பனீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு சுவையான இந்த  சில்லி பனீர் ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

பனீர் – 200 கிராம்
மைதா மாவு – 75 கிராம்
கார்ன்ஃப்ளார் மாவு – 25 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
குடமிளகாய் – ஒன்று
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
செலரி தண்டு – ஒரு டேபிள்ஸ்பூன்
வெங்காயத்தாள் – 2 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன் (மாவு கலவைக்கு)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
தண்ணீர் – 50 மில்லி

எப்படிச் செய்வது?

பனீரை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, செலரி, பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாகவும், குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை சதுரமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, அரை டீஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதில் நறுக்கிய பனீரை முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சைவாசனை போனதும் செலரி, பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கிய பிறகு சிவப்புமிளகாய் சாஸ், சோயா சாஸ், உப்பு, தண்ணீர் என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வேகவிடவும்.

இந்தக் கலவை கொதித்து வந்ததும், இத்துடன் பொரித்தெடுத்த பனீரைச் சேர்த்து நன்றாகக் கிளறி கலவை பனீரோடு சேர்ந்து வரும் வரை இரண்டு நிமிடம் சிம்மில் வேகவிட்டு இறக்கவும். இதில், நறுக்கிய வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்.

எல்லோருக்கும் ஏற்றவையா சிறுதானிய உணவுகள்?

வரகு முறுக்கு வற்றல்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *