குழந்தைகள் ஆபாச படத்தை வைத்திருந்ததுடன், அதை வெளிநாட்டுக்கு அனுப்பியது தொடர்பாக இன்டர்போல் போலீஸ் கொடுத்த தகவலின் பேரில் திருச்சியை சேர்ந்த நபர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசுப்பிரமணியம் என்கிற சாம் ஜான். இவரது பெற்றோர்கள் சுகாதாரத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்.
சாம் ஜான் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் வேலை பார்த்துள்ளார். நேற்று (டிசம்பர் 1) காலை இவரது வீட்டில் டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் 6 பேர் மணப்பாறை போலீசாரை வரவழைத்து சோதனையில் ஈடுபட்டனர்.
ஜெர்மனியில் செயல்படும் நிறுவனம் மூலமாக ஆன்லைனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ராஜா பகிர்ந்ததாகக் கூறி சோதனை நடத்தப்பட்டது.
ஜெர்மன் நாட்டில் இருந்து இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சாம் ஜான் வீட்டில் சோதனை நடத்தியதில் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், லேப்டாப்கள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பகிர்ந்திருப்பதும், பதிவிறக்கம் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று (டிசம்பர் 2) சாம் ஜான் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
கலை.ரா
ராகுல் நடைபயணம்: இணையும் பிரபலங்கள்!
ஷாக் அடிக்கும் தங்கம் விலை: ரூ.40 ஆயிரத்தைத் தாண்டியது!