கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அம்மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்திவருகிறார்.
கோவையில் கடந்த 2 நாட்களாக மாநகர், மற்றும் புறநகர் பகுதியில் என மொத்தம் 8 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் கார் எரிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இதனால் கோவை முழுவதும் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட போலீசார் கோவை மாநகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அதிரடி படை மற்றும் கமாண்டோ படையினரும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பதற்றமான சூழலை தவிர்ப்பதற்காக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில், கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக மாவட்ட உயரதிகாரிகளுடன் இன்று (செப்டம்பர் 24) தலைமை செயலாளர் இறையன்பு காணொளி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் குண்டுவீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும், அசாம்பாவிதங்கள் மேலும் தொடராமல் இருப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!
நானே வருவேன் “இரண்டு ராஜா” பாடலில் என்ன ஸ்பெஷல்?