எம்.எல்.ஏ-க்களுக்கு முதல்வர் உத்தரவு!

Published On:

| By Kalai

தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை தெரிவிக்குமாறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 23) எழுதியுள்ள கடிதத்தில், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி ஒரு பட்டியலை தயார் செய்து அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கூறியிருக்கிறார்.

குறிப்பாக நீர் ஆதாரம், வேளாண் சார்ந்த பிரச்சினைகள், சாலை வசதி, நவீன மின்மயானம், நூலகம், மருத்துவ வசதிகள், கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை கண்டறிந்து அதை  பரிந்துரைக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

நடைமுறையில் உள்ள திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாதவற்றை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் கூறியிருக்கிறார்.

பல்வேறு சூழ்நிலைகளால் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் புதிய திட்டத்தின் கீழ் நிறைவேறும் என்று நம்புவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்து தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க இந்த திட்டம் பங்களிக்கும் என்று அவர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கலை.ரா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share