முதல்வர் ஸ்டாலினுக்கு என்னாச்சு?: வெளியான மருத்துவ அறிக்கை!

தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மழை காரணமாக சமீப நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

Image

மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேசன் மருத்துவமனை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வருக்கு நேற்று முதல் இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அவரை பரிசோதித்ததில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் தொடர் சிகிச்சை பெறவும், சில நாட்கள் ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று சென்னை பெசன்ட் நகரில் நடப்போம் நலன் பெறுவோம் என்ற திட்டத்தை தொடக்கி வைக்க இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் பங்கேற்கவில்லை.

நாளை திருவள்ளூரில் நடைபெறும் சென்னை மண்டல  திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பருவமழை: அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு!

சினிமா பைரசி… கண்காணிப்பு குழு நியமனம்..!

+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *