முதல்வரின் தனிச் செயலாளர் தினேஷ் குமாரின் தந்தை டி.வி.ரவி(63) மறைவெய்தினார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (மே 12) இரவு 9 மணியளவில் காலமானார்.
இந்த செய்தி அறிந்ததும், முதல்வர் ஸ்டாலின் தனிச் செயலாளர் தினேஷ்குமாருக்கு ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்தார்.
இன்று (மே 13) மாலை சேலம் – நாமக்கல் வழியில் உள்ள அவரது சொந்த ஊரான வெண்ணந்தூரில் டி.வி.ரவியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
மறைந்த டி.வி.ரவிக்கு அர். சுமதி என்ற மனைவியும், மகன் தினேஷ் குமார், மருமகள் ஐஸ்வர்யா மற்றும் மகள் திவ்யா, மருமகன் செல்வக்குமார் ஆகியோர் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நூற்றாண்டு பிறந்தநாளை நினைவு நாளாக காணும் கே.என்.ராஜ் 13.5.1924 – 13.5.2024
“இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள்” : வெற்றிமாறன் பதிலடி!