சென்னை தீவுத்திடலில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை சார்பில் சென்னை சங்கமம் விழா நடைபெற உள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒருங்கிணைப்பில் சென்னை சங்கமம் விழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியை இன்று (ஜனவரி 13) மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கித் தொடர்ந்து கரகாட்டம், தப்பாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றவுள்ளார்.
இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் துரைமுருகன், சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மோனிஷா
டிஜிட்டல் திண்ணை: முர்முவிடம் முதல்வர் ஸ்டாலின்… அமித் ஷாவிடம் ஆளுநர் ரவி: அடுத்து என்ன?