சிதம்பரம் தொகுதியில் ஆறு சுற்று வாக்கு எண்ணிக்கையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் போன்றவை இருந்தன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டன.
அதன்படி, சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில், 6 சுற்றுகளுக்கான வாக்கு எண்ணிக்கை விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
முதல் மற்றும் இரண்டாம் சுற்றுகளின் முடிவில்,
விசிக – 49,635
அதிமுக – 39,833
பாஜக – 15,713
நாதக – 6,104
மூன்றாம் சுற்றின் முடிவில்,
விசிக – 70,330
அதிமுக – 59,566
பாஜக – 23,813
நாதக – 9,594
நான்காம் சுற்று முடிவில்,
விசிக – 94,756
அதிமுக – 79,370
பாஜக – 32,486
நாதக – 12,706
6வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில்,
விசிக – 1,44,656
அதிமுக – 1,17,514
பாஜக – 46,644
நாதக – 19,295
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட தொல்.திருமாவளவன் 6 சுற்று முடிவில் 27,142 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒடிசா : ஆட்சியை இழக்கும் நவீன் பட்நாயக்?
ராமநாதபுரம் : ஓ.பன்னீர்செல்வம் வாக்குகளை கைப்பற்றினார்களா ‘ஓபிஎஸ்’கள்?