உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் இன்று (ஜனவரி 5) வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் மற்றும் தரிசன விழாவும், மார்கழி மாதத்தில் நடராஜருக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிகள் நான்கு மாட வீதிகளில் உலா வந்தனர்.
இன்று 9-ஆம் நாள் திருவிழாவான தேரோட்டம் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேரோட்டத்தில் சிவனடியார்கள், பக்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் தேரினை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
முதலில் விநாயகர் தேர், இரண்டாவதாக முருகப்பெருமான், மூன்றாவதாக நடராஜர், நான்காவதாக சிவகாமி அம்மாள், ஐந்தாவதாக சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக சிவ சிவ கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
இந்த ஐந்து தேர்களும் கிழக்கு கோபுர வாயில் முன்பு புறப்பட்டு தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதிகளில் சுற்றி மீண்டும் தேரானது கிழக்கு கோபுர வாயிலின் முன்பாக வந்தடையும்.
கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செல்வம்
துணிவு Vs வாரிசு: ஒரே நாளை லாக் செய்த அஜித் விஜய்
வார் ரூம்: அண்ணாமலையை கிழித்து தொங்க விட்ட மாரிதாஸ்