கிச்சன் கீர்த்தனா: சிக்கன் பர்கர்!

தமிழகம்

ஃபிரெண்ட்ஸ் ஒன்றாக சேர்ந்தாலே பர்கர் பார்ட்டிதான். யாருமேயில்லாமல் தனியாக இருந்தாலும், தனிமையைக் கடப்பதற்கு பர்கரை ஆர்டர் செய்து விடுகிறோம். இந்த நிலையில் வீட்டிலுள்ள அனைவரையும் அசத்த இந்த சிக்கன் பர்கர் ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

எலும்பில்லாத சிக்கன் – அரைக் கிலோ

ஃப்ரெஷ் பிரெட் – 3 ஸ்லைஸ் (மீடியம் சைஸ்)

இஞ்சி – பூண்டு விழுது – 4 டீ ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1

ரோஸ் மேரி – அரை டீஸ்பூன்

பர்கர் பன் – 4

வட்ட வடிவில் வெட்டிய வெங்காயம் – 1

வட்ட வடிவில் வெட்டிய குடமிளகாய் – 1

சீஸ் – 4 துண்டு

வெண்ணெய் – 100 கிராம்

எப்படிச் செய்வது?

சிக்கனை சுத்தம் செய்து மிக்ஸியில் நைசாக அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், ஃப்ரெஷ் ப்ரெட் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை சிக்கனுடன் கலந்து வடை மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும் தயாராக வைத்துள்ள சிக்கன் கட்லட் சேர்த்து பொரிக்கவும். ஒவ்வொரு பக்கங்களும் 10 நிமிடங்களுக்கு வேக வைத்துக்கொள்ளவும் அவ்வப்போது திருப்பி போடவும். சிக்கன் நன்றாக வெந்து பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து தனியே வைக்கவும்.

கிரில் சூடானதும் வெண்ணெய் தடவி பர்கர் பன்னை இரண்டாக வெட்டி, அதன் மேல் வைத்து லேசாக சூடேற்றவும். சூடான பர்கர் பன்னில் செய்து வைத்துள்ள சிக்கன் கலவையை வைத்து வட்டமாக வெட்டிய வெங்காயம், குடமிளகாயை வைத்து அலங்கரித்து ரோஸ் மேரி இலை சீஸ் தூவி மற்றொரு பர்கர் பன் பாகத்தால் மூடி, பன்னின் மேல் வெண்ணெய் தடவி, பார்பிக்யு அடுப்பில் வைத்து நன்கு கிரில் செய்து சாஸ் உடன் பரிமாறவும்.

குறிப்பு: தற்போது ஆன்லைன் ஸ்டோர்களில், பார்பிக்யு சார்கோல்க் கிரில் அடுப்புகள் 700 ரூபாயில் இருந்து 2,500 வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. இந்த அடுப்புகளில் கங்குகள் போட வேண்டிய இடத்தில் கங்குகளைப் போட்டு கிரில் செய்யலாம்.

காடை பார்பிக்யு!

கிரில்ட் மீன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *