சென்னையில் போகி அன்று அதிகம் காற்று மாசு ஏற்பட்ட பகுதியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளான நேற்று (ஜனவரி 14) தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் 13.01.2024 காலை 8 மணி முதல் நேற்று 14.01.2024 காலை 8 மணி வரையிலான 24 மணி நேர காற்றின் தரக்குறியீட்டு அளவீட்டை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதில் சென்னை வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக காற்றின் தரக் குறியீடு மோசமான அளவுக்கு அதாவது 270 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அண்ணாநகரில் குறைந்தபட்ச மிதமான அளவில் அதாவது 131 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய ஆண்டு மதிப்பை ஒப்பிடும்போது காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு ஒரே மாதிரியாக உள்ளது எனவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
போகி நாளில் சென்னையில் 15 மண்டலங்களில் காற்று மாசு அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்தது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் டயர், டியூப், பிளாஸ்டிக் மற்றும் கழிவுப்பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
பியூட்டி டிப்ஸ்: பல் சொத்தையைத் தடுக்க எளிய வழி!
தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை தயாரிக்கும் அட்லி!
நிஜ புலியுடன் நடித்த புகழ்: Zoo Keeper டீசர் இதோ!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணிராதீங்க!