தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் மூன்று நாட்களுக்கு இயங்காது என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நான்கு PSK (Passport Seva Kendra)கள் உள்ளன – அமிஞ்சிக்கரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரத்தில் தலா ஒன்று மற்றும் புதுச்சேரியில் மற்றொன்று. சராசரியாக இங்கு தினமும் 2,500 முதல் 2,700 சந்திப்புகளைக் கையாளுகிறது.
வழக்கமாக, பல்வேறு பாஸ்போர்ட் சேவைகளுக்கான நியமனங்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகமாக இருக்கும் மற்றும் பொதுவாக செவ்வாய்கிழமைகளில் குறைவாக இருக்கும். ஏப்ரல் இறுதி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட கோடை விடுமுறையின்போது விண்ணப்பங்கள் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் நாளை ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் .2-ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது.
பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காததால் ஆகஸ்ட் 30-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30-ல் சென்னை அண்ணாசாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பொது விசாரணை அரங்கும் செயல்படாது.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட் பிக்கிள்!
இது என்னடா வித்தியாசமான உருட்டா இருக்கு? அப்டேட் குமாரு
நீதிமன்றத்துக்கு வர தாமதம் : காணொளியில் ஆஜரான திருமாவளவன்
விஜய் கொடியில் யானை… தேர்தல் ஆணையத்தில் பிஎஸ்பி புகார்!