தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
நீலகிரியில் 10 செ.மீ., ஈரோட்டில் 7 செ.மீ, திருவள்ளூரில் 6 செ.மீ., கோவையில் 3 செ.மீ.சென்னை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா 1 செ.மீ. மழையும் பதிவானது.
சென்னையில் இன்று(அக்டோபர் 8) காலை சில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த ஆண்டு வரும் 15 ஆம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
“08.10.2024: கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
09.10.2024: கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
08.10.2024 முதல் 12.10.2024 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
08.10.2024: மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வினேஷ் போகத் வெற்றி… 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜுலானா தொகுதியை பிடித்த காங்கிரஸ்
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தைத் தொடக்கி வைத்த தளவாய்…அதிரடி ஆக்ஷன் எடுத்த எடப்பாடி
ஹரியானா தேர்தல் : காங்கிரஸை காலி செய்த ஆம் ஆத்மி!