வினாத்தாள் குளறுபடி காரணமாக இணைப்பு கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக இன்று (நவம்பர் 18) சென்னை பல்கலைக் கழகம் அறிவித்தது.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இணைப்பு கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளில் இன்று காலை 2ஆம் ஆண்டிற்குரிய மூன்றாவது செமஸ்டர் தமிழ் பாடத் தேர்வு தொடங்கியது.
வினாத்தாளைத் தேர்வறை கண்காணிப்பாளர்கள் வழங்கியதும் அதை வாங்கி பார்த்த மாணவர்கள், ஒரு கேள்வியும் தெரியவில்லையே என்று முழித்துள்ளனர்.
பின்னர்தான் அது இன்றைய தேர்வுக்குரிய கேள்வித்தாள் இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் ஆண்டு நான்காவது செமஸ்டர் தேர்வுக்குரிய கேள்வித்தாளைத் தேர்வுக்குக் கொடுத்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 18) காலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி,
“கேள்வித்தாள் மாற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். மாணவர்கள் பாதிக்கப்படும் வகையில் யார் நடந்துகொண்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த தேர்வை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ” என்று கூறினார்.
பிரியா
விரைவில் அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் அறிவிப்பு!
2 படங்களில் நடித்தால் கலைமாமணி விருதா? – உயர்நீதிமன்றம் கேள்வி!