செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது டாடா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரத்தில் இன்று (டிசம்பர் 7) அதிகாலை 5.30 மணியளவில், சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த டாடா ஏஸ் வாகனம், முன்னே சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.
அப்போது டாடா ஏஸ் மீது பின்னால் வந்துகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று, அதன் மீது மோதியுள்ளது. இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கி டாடா ஏஸ் வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், டாடா ஏஸ் வாகனத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில், ஓட்டுநர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு போலீசார் காயமடைந்தவர்களை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தின் காரணமாக திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செல்வம்
தமிழகத்தை நெருங்கும் மாண்டஸ்: வெளுக்கப் போகும் கனமழை!
உலகக்கோப்பை கால்பந்து: புதிய ஹீரோவால் ஜொலித்த போர்ச்சுகல்