தீபாவளி ஷாப்பிங்… தி.நகருக்கு போகிறீர்களா? இதை கவனிங்க!

தமிழகம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தி.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையை ஒட்டி தி.நகருக்கு சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் இன்று (அக்டோபர் 6 ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தி.நகர் பகுதிகளுக்கு வருகை தர வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு,

பொதுமக்களின் வசதிக்காகவும் போக்குவரத்தினைச் சீரமைக்கும் நோக்கிலும் 08.10.2022 முதல் 24.10.2022 வரை, தி.நகர் பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கீழ்க்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப ஆட்டோக்களின் இயக்கமானது, தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்தும், ரோகிணி சிக்னல் சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் கோட்ஸ் சாலை சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாராஜபுரம் சந்தானம் சாலை சந்திப்பிலிருந்தும், பிருந்தாவன் சந்திப்பிலிருந்தும் மற்றும் கண்ணம்மாபேட்டை சந்திப்பிலிருந்தும் பனகல் பூங்கா நோக்கிச் செல்ல தடை செய்யப்படும்.

சரக்கு மற்றும் வணிகரீதியான வாகனங்கள் தி.நகர் பகுதிக்குள் வியாபார நேரத்தில் செல்லத் தடை செய்யப்படும். இத்தகைய வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை தி.நகர் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படும்.

ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள தியாகராய சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் தணிகாசலம் சாலை பன்னடுக்கு வாகன நிறுத்தமிடங்கள் தவிர விடுமுறை நாட்களில் பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளி, பாஷ்யம் சாலையில் உள்ள இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மற்றும் தண்டபானி சாலையில் உள்ள இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

பொதுமக்களும் வணிகர்களும் போக்குவரத்து காவல் துறையினருக்குத் தக்க ஒத்துழைப்பை நல்கக் கேட்டுக் கொள்ளப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மாடு முட்டி சேதமான மோடி ரயில் !

டிஜிட்டல் திண்ணை: அறிவாலயத்தில் ஸ்டாலின் திடீர் மயக்கம்! 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *