மெட்ரோ பணிகள் காரணமாக நாளை முதல் (மார்ச் 29 ) ராஜீவ்காந்தி (ஓ.எம்.ஆர்) சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்ய உள்ளதாக போக்குவரத்து காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, “தரமணி மற்றும் கந்தன் சாவடி சாலையில் மெட்ரோ பணிகளை நாளை முதல் தொடங்க உள்ளதால் சோதனை அடிப்படையில் ஒரு வாரத்திற்கு ஓ.எம்.ஆர் சாலையில் போக்குவரத்து மற்றம் செய்யப்படும்.
அடையாறு மற்றும் திருவான்மியூர் சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் வேளச்சேரி நோக்கி எஸ்ஆர்பி சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, அவர்கள் ஒய்எம்சிஏ முன்பு புதிய “யு” திருப்பம் செய்து, எஸ்ஆர்பி சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி தாங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம் என்றும் அதற்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று போக்குவரத்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
– மாணவ நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…