சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 குறைந்துள்ளது.
கடந்த 10 நாட்களாகத் தங்கம் விலை ரூ.45 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை ஏறு இறங்குமுகமாக இருந்தாலும் இன்னும் 45 ஆயிரத்துக்குக் கீழ் குறையவில்லை.
அட்சய திருதியை நெருங்கியுள்ள நிலையில், தங்கம் விலை எப்போது குறையும் என்று நகை பிரியர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று தங்கம் விலை ரூ.560 குறைந்திருக்கிறது.
22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து, 5,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.560 குறைந்து 45,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
அதுபோன்று வெள்ளி விலை இன்று கிராம் 81.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ 81,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரியா
ஜப்பான் பிரதமர் கூட்டத்தில் குண்டுவீச்சு!
ராகுல் விவகாரம்: காங்கிரஸ் இன்று ரயில் மறியல்!