சென்னை – திருச்சி பாலத்தில் விரிசலா? – வைரல் வீடியோ உண்மையா?

Published On:

| By Selvam

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பரவும் வீடியோ பழைய வீடியோ என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு இன்று (அக்டோபர் 23) தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஓங்கூர் பகுதியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 500 மீட்டர் தூரத்திற்கு ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஆற்றுப்பாலமானது கட்டப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் சென்றபோது பாலமானது மேலும் கீழும் ஊசலாடியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை ஓட்டினர். இந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனையடுத்து பாலத்தில் ஆய்வு செய்த அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து விரிசல் ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பாலம் திறக்கப்பட்டது.

இந்தநிலையில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பழமையான ஆற்றுப்பாலம் பழுதடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இது கடந்த 2022-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழமையான காணொலி என்றும் தற்போது பாலத்தின் நிலை சீராக உள்ளதாகவும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வழிநெடுக ஆயிரக்கணக்கான தொண்டர்கள்… வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி

ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்: எடப்பாடி பழனிசாமி தாக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel