கோரமண்டல் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்ல சென்னையில் இருந்து இன்று (ஜூன் 3) மாலை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் 500-க்கும் மேற்பட்ட தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 200 ஆம்புலன்ஸ்கள், 45 நடமாடும் சுகாதாரக் குழுக்கள், 50 கூடுதல் மருத்துவக் குழுக்கள், தடயவியல் மருத்துவ நிபுணர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு முதல் மீட்புப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக ஒடிசாவின் வருவாய் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை.
இந்நிலையில், காயமடைந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று (ஜூன் 3) மாலை 6.30 மணிக்கு சென்னை செண்டரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளது.
ஒடிசா செல்லும் சிறப்பு ரயிலில் செல்ல முன்பதிவு செய்வதற்காக தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி, 033-26382217, 8972073925, 9332392339, 8249591559, 7978418322, 9903370746 ஆகிய உதவி எண்களை உறவினர்கள் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
ரயில் விபத்து… உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்