சென்னையிலிருந்து இன்று (ஆகஸ்ட் 27) காலை துபாய் செல்ல தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இன்று காலை 7.20 மணிக்குச் சென்னையிலிருந்து துபாய் செல்வதற்கு இண்டிகோ விமானம் தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
அப்போது, மர்மநபர் ஒருவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம், துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டுடன் ஒருவர் பயணிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த 160 பயணிகளை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று விமான நிலைய காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மர்மநபரிடம் இருந்து வந்த செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து சென்னை மணலியைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், “தனது தங்கையும் தங்கை கணவரும் துபாய் செல்வதை தடுப்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
துபாய் செல்ல வேண்டிய விமானம் காலை 11 மணிக்குத் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
மோனிஷா
நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசியின் அதிர்ச்சி பட்டியல்!
இந்த பன்னாடையால எத்தனை பேருக்கு லேட் ஆகி எவ்வளவு கஷ்டம், எத்தனை பேர் துபாய் கனக்ட்டிங் பிளைட் மிஸ் பன்னாங்களோ பாவம்