சென்னையில் இருந்து அயோத்திக்கும், லட்சத்தீவின் அகாட்டி தீவுக்கும் அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பல்வேறு தரப்பினருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அங்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சர்வதேச தரத்துடன் விமான நிலையமும் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து அயோத்திக்கு அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்படும் என சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து அயோத்திக்கும், லட்சத்தீவின் அகாட்டி தீவுக்கும் அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. விமான சேவை தொடங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அதன்பின்னர் முன்பதிவு குறித்த தகவல் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரூ.6,499 என்ற கட்டணத்தில் விமான சேவை முன் பதிவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து அயோத்திக்கு பகல் 12.40 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3.15-க்கு சென்றடையும். அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.20-க்கு சென்னை வந்து சேர உள்ளதாக தெரிகிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: டிரெண்ட் ஆகும் `புத்தா பௌல்’ டயட் – எல்லாருக்கும் ஏற்றதா?
இந்தியா கூட்டணி கூட்டத்தில் விவாதித்தது என்ன?: சரத் பவார் பேட்டி!