Chennai - Tirupati train service cancelled

சென்னை – திருப்பதி ரயில் சேவை நாளை முதல் ரத்து!

தமிழகம்

தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், தண்டவாள மேம்பாட்டுப் பணி காரணமாக சென்னை – திருப்பதி விரைவு ரயில் சேவை நாளை (செப்டம்பர் 28) முதல் ரத்து செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினமும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள தண்டவாள மேம்பாட்டுப் பணி காரணமாக நாளை (செப்டம்பர் 28) முதல்  அக்டோபர் 12ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.

இதில் சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 6.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (எண்.16057), பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் திருப்பதி விரைவு ரயில் (எண்.16053) மற்றும் மாலை 4.35 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில் (எண்.16203) நாளை முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதுபோல மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில் (எண்.16204), காலை 10.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (16054) மற்றும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (எண்.16058) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜ்

2 நாட்களுக்குள்…. மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை ரத்து!

ரெண்டாயிரத்துக்கு வந்த எண்டு….: அப்டேட் குமாரு!

+1
1
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *